சந்தேகத்தை எழுப்பும் ஆளுநரின் உரை: திருமாவளவன் அதிருப்தி

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி வரும் தமிழக ஆளுநர், சட்டப்பேரவையில் ஆற்றிய உரை மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என திருமா வளவன் (படம்) தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் வணிகர்கள் மட்டுமின்றி வருவாய் குறைந்து மாநில அரசும் விழிபிதுங்கி நிற்கும் வேளையில், அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ஆளுநர் பாராட்டி இருப்பது வெந்த புண்ணில் விரலால் குத்துவதுபோல இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஆளுநரின் பேச்சு தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதோ என்கிற சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இது ஏமாற்றம் அளிக்கும் உரை," என்றும் திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!