வீரர்கள் தேர்வு; குழப்பத்தில் கோஹ்லி

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நாளை 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் தோற்ற இந்திய அணி, நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்றால், வெளிநாட்டு மண் ணில் அனுபவமிக்க வீரர்களைக் களம் இறக்க வேண்டும்.

முதல் போட்டியில் லோகேஷ் ராகுல், ரகானேவிற்கு வாய்ப்பளிக்கப்படாததே இந்திய அணியின் தோல் விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் கள் வெளிநாட்டு மண்ணில் நன்றாக விளையாடிய தில்லை என்பதை அவர்களது சாதனைப் பட்டியல் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் லோகேஷ் ராகுலோ ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என வெளிநாட்டு மண்ணில் அசத்தியுள்ளார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்குப் பதிலடி கொடுக்க நினைக்கும் இந்திய அணி நாளைய போட்டியில் தவானுக்குப் பதில் லோகேஷ் ராகுலை களம் இறக்க வாய்ப்புள்ளதாக 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி தெரிவிக்கிறது. அதே போல் ரோகித் சர்மா வுக்குப் பதில் எதிரணி மண்ணில் அசத்தி வரும் ரகானேவுக்கு வாய்ப்பளிக் கப்படலாம். அதுபோல் வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்த அஸ்வினுக்குப் பதில் இஷாந்த் சர்மா சேர்க்கப்படலாம். மேலும் ஆறு பந்தடிப்பாளர்கள், நான்கு பந்து வீச்சாளர்கள் என இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்வது குறித்து கோஹ்லி குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!