'குறைபாடு ஒரு தடையல்ல’

சுதாஸகி ராமன்

தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த வேளையில் செவிப் புலன் சோதனையை மேற்கொண்ட போது வலது காதில் சிறிதளவில் குறைபாடு இருப்பது தெரியவந் தது. எனினும், கல்வியில் முன் னேற அது 16 வயது ஜஃபீனுக்குத் தடையாக விளங்கவில்லை. ஈஸ்ட் வியூ உயர்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த முஹம்மது ஜஃபீன் ஜியாவுதீன், சாதாரண நிலைத் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி பெற்று, தெமாசெக் பல துறை தொழிற்கல்லூரியில் இணைய மின்னியல் தடயவியல் துறையில் சேரவுள்ளார். "சிறு வயதில் ஏற்பட்ட செவிப் புலன் குறைபாட்டை வெற்றி கரமா க சமாளித்து வருகிறேன். இன்று என்னுடைய செவித்திறன் முன்னேறியுள்ளது. வகுப்புகளில் முதல் வரிசையில் உட்கார்ந்ததால் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த போது தெளிவாகக் கேட்க முடி ந்தது," என்று கூறினார் அவர்.

தகவல் தொழில்நுட்பத் துறை யில் சொந்த வர்த்தகம் செய்துவ ரும் தந்தையின் தாக்கத்தைத் தொடர்ந்து அத்துறையில் சேர்ந்து பணிபுரியவேண்டும் என்ற ஜஃபீன் முடிவெடுத்தார். மேலும், கடந்த சில ஆண்டுக ளா கத் தொலைக் காட்சியில் குற்றவியல் தொடர்பான நாடகங்களைக் கண்டு ரசித்து வந்ததாலும் தடய வியல், இணைய பாதுகாப்புத் துறை களிலும் இவ ருக்கு ஆர்வமும் ஏற்பட்டது. இதனால், மூன்று துறைகளைச் சார்ந்த காவல் துறையில் எதிர் காலத் தில் பணியாற்ற ஜஃபீன் திட்டமிட்டுள்ளார். ஆங்கிலம், தமிழ்மொழி ஆகிய பாடங்களுடன் அறிவியல், கணி தம், வரலாறு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் மொத்தம் 18 புள்ளிகளை ஜஃபீன் பெற்றிருக்கிறார்.

முஹம்மது ஜஃபீன் ஜியாவுதீனுடன் (இடமிருந்து இரண்டாவது) அவருடைய தந்தை ஜியாவுதீன் முஹம்மது யாசீன் (இடமிருந்து), தமிழாசிரியை திருவாட்டி ரோசினா பேகம், வகுப்பாசிரியர் குமாரி பிரியங்கா பாசு ரோய். படம்: ஈஸ்ட் வியூ உயர்நிலைப்பள்ளி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!