செஞ்சூரியன்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி தென்னாப்பிரிக்கா வுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்வி அடைந் துள்ளது. இதன் விளைவாக டெஸ்ட் தொடரை அது இழந்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்கா வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கேப் டவுனில் நடந்த முதலாவது டெஸ்ட்டில் தென்னாப் பிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று 1-0 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்னாப்பிரிக்க அணி 335 ஓட்டங்களும், இந்தியா 307 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 258 ஓட்டங்கள் எடுத்துத் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்கு 287 ஓட்டங்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்தது. முரளி விஜய் 9 ஓட்டங்களுடனும் லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களுடனும் கோஹ்லி 5 ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர். இந்தியா 50.2 ஓவர்களில் 151 ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தது. தென் னாப்பிரிக்கா 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.