வேலை நியமனச் சட்டம் மறுஆய்வு

சிங்கப்பூரின் பிரதான தொழிலாளர் சட்டமான வேலை நியமனச் சட்டத்தை மனிதவள அமைச்சு மறுஆய்வு செய்து வருகிறது. அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக் கூறலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற் கான கடைசி நாள் பிப்ரவரி 15. இந்தச் சட்டம் கடைசியாக 2012ல் மறுஆய்வு செய்யப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங் கள் நடப்பிற்கு வந்தால் மாதம் $4,500க்கு மேல் ஊதியம் பெறும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) ஆகியோர் பொது விடுமுறை, மருத்துவ விடுப்பு உரிமைகள், சரியான நேரத்தில் ஊதியம் கிடைத் தல் போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவது சட்டபூர்வமாக்கப்படும்.

தற்போது $4,500 வரை ஊதியம் ஈட்டும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளை மட்டும் வேலை நியமனச் சட்டம் உள்ளடக்குகிறது. "இத்தகைய முக்கிய சலுகைகள் எல்லா ஊழியர்களுக்கும் விரிவுபடுத் தப்பட வேண்டுமா என்பது தொடர் பில் கருத்துகளை வரவேற்கிறோம்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது. எளிதில் வேலையிழக்க வாய்ப்பு உள்ள ஊழியர்களுக்கு மிகைநேர ஊதியம், வருடாந்திர விடுப்பு போன்ற கூடுதல் சலுகைகளை விரிவுபடுத்து வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!