‘காணொளி நடுவர் முறை மேம்படுத்தப்பட வேண்டும்’

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற் பந்தில் நார்விச் குழுவை பெனால்டி வாய்ப்புகள் முறையில் வென்ற செல்சி குழுவின் நிர்வாகி கோன்டே, காணொளி நடுவர் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று நடந்த இப்போட்டியில் செல்சி வீரர் வில்லியனை நார்விச் வீரர் டிம் குளோஸ் தடுத்தாடினார். இந்தத் தப்பாட்டத்திற்கு செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார் கோன்டே. மேலும் வில்லியனுக்கு கள நடுவர் மஞ்சள் அட்டை காண்பித் தார். ஆனால், அந்நிகழ்வைக் கள நடுவர் காணொளியில் கண்டிருந் தால் கண்டிப்பாக அது பெனால்டி வாய்ப்பு என்று தெரிந்திருக்கும் என்றார் கோன்டே. அதேபோல் ஆட்டத்தைக் காணொளியில் பார்த்துக்கொண்டு இருக்கும் காணொளி நடுவர், கள நடுவரிடம் காணொளியைப் பார்த்த பிறகு முடிவு செய்யுமாறு கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். "காணொளியைப் பார்த்திருந் தால் கள நடுவர் தமது முடிவை மாற்றியிருப்பார்.

"இந்த புதிய முறையை நாம் பின்பற்ற வேண்டுமானால் இதை மேம்படுத்த வேண்டும்," என்றார் கோன்டே. முன்னதாக 55வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோல் விழுந்தது. செல்சி போட்ட அந்த கோலை காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது சமன் செய்தது நார்விச். எனவே ஆட்டம் 1=1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்ட தால் கூடுதல் நேரம் சென்றது. அதன் பிறகு வில்லியனுக்கு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்ட தைத் தொடர்ந்து பெட்ரோ, அல்வாரோ மொராட்டா ஆகிய இருவரும் இரண்டு மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!