ரயில் நிலையங்களில் வெள்ளத்தடுப்பு வசதிகள்

பீஷான் எம்ஆர்டி ரயில் நிலை யத்தில் இருப்பது போலவே மேலும் நான்கு ரயில் நிலை யங்களில் வெள்ளத் தடுப்பு வசதிகள் அமைக்கப்படும். கிழக்கு மேற்கு ரயில் பாதை யில் உள்ள லாவெண்டர், ரெட் ஹில், கெம்பாங்கான், எக்ஸ்போ ஆகிய ரயில் நிலையங்ளுக்கு அருகே இந்த வெள்ளத் தடுப்பு வசதிகள் அமைக்கப்படும். நிலத்துக்கு மேலே செல்லும் ரயில் தடமும் நிலத்துக்குக் கீழே சுரங்கப்பாதையில் செல்லும் ரயில் தடமும் இந்த நான்கு இடங்களில் சந்திக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பிராடல், பீஷான் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப்பாதையில் வெள்ள நீர் நிரம்பி சுமார் 20 மணி நேரம் சேவைத் தடை ஏற்பட்டது.

அங்கிருந்த வெள்ளத் தடுப்புக் கருவிகள் முறையாகப் பராமரிக்கப் படாததன் காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 250,000 பேர் பாதிக்கப்பட்டனர். அந்தச் சம்பவம் மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்றும் வெட்கப்படவைக்கும் ஒன்று என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அப்போது வர்ணித்தார்.

அமைக்கப்படும் புதிய வெள்ளத் தடுப்பு வசதிகளில் மேலும் அதிகமான மிதவை விசைகள், நீரை வெளியாக்கும் கருவிகளை ஊழியர்கள் எளிதில் சென்றடையக்கூடிய இடங் களுக்கு மாற்றுதல் போன்ற பல அம்சங்கள் உள்ளன என்று எஸ்எம்ஆர்டி கட்டட, சேவைப் பிரிவு இயக்குநர் சியூ யாவ் வீ நேற்று செய்தியாளர் களிடம் விவரித்தார். முன்னதாக ஐந்து மிதவை விசைகள் மட்டுமே இருந்தன. ஆனால் அக்டோபர் சம்பவத் திற்குப் பிறகு இப்போது அத்தகைய எட்டு விசைகள் உள்ளன. சுரங்கப்பாதையின் அடித்தளத் தில் நீர் மட்டம் அதிகமானால் இந்த விசைகள் எஸ்எம்ஆர்டி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!