அண்ணா சாலையில் 40 அடி நீள பள்ளம்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்று சென்னை எழும்பூர் முதல் நேரு பூங்கா இடையே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சுரங்க ரயில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந் தது. இந்நிலையில் அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இத னால் மக்கள் பெரும் பீதியடைந்துள்னர். பள்ளம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக ஆய்வு செய்யு மாறு மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நந்தனத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விஜயராகவா சாலை, ஜிஎன் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் கூறுகையில், ஆய்வுக்குப் பிறகே பள்ளம் ஏற் பட்டது குறித்த காரணம் தெரியவரும். அந்த பகுதியில் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகக் கூறினார். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!