ஃபிஷரி போர்ட் ரோட்டில் உள்ள பென் ஃபூட்ற் எனும் உணவுத் தொழிற்சாலையின் குளிர்பதன அறையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அச்சம்பவம் பற்றி தனக்கு நேற்றுக் காலை 11.40 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப் பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
"அந்தத் தொழிற்சாலையின் முதல் மாடியில் உள்ள குளிர்பதன அறையில் அந்த வாயுக் கசிவு ஏற் பட்டது. உடனே, அந்த அறையின் மின்சார விநியோகம் நிறுத்தப் பட்டு, அதன் 100 ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட னர்," என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மூவரை நீர் குளியல் மூலம் சுத்தப் படுத்தப்பட்டனர் என்றும் பின்னர் அவர்கள் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது என் றும் தெரிவிக்கப்பட்டது.
'ஹெஸ்மட்' நிபுணத்துவ பிரிவினர் கட்டடத்துக்குள் நுழைகின்றனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை