பெண்ணைக் கடத்த போலிஸ் வாகனத்தைப் பயன்படுத்திய கும்பல்

போபால்: மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்ட போலிசின் அவசர உதவி தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்பை அடுத்து போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு மயங்கி கிடந்த ஒருவருக்கு உதவுவதற் காக போலிசார் அருகில் சென்றனர். அச்சமயம் மயக்கத்தில் இருந்தவர் போலிசை நோக்கி துப்பாக்கியை நீட்டி மிரட்ட மேலும் நான்கு பேர் அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் போலிசாரைக் கட்டிப்போட்டு போலிஸ் வாகனத் தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். அதன் பிறகு, அதே வாகனத்தில் இளம்பெண் ஒருவரை அவர்கள் கடத்தினர். பின்னர் போலிசையும் அவர்கள் வாகனத்தையும் மட்டும் விடுவித்துவிட்டு அந்தப் பெண்ணைத் தங்களின் சொந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். பமுரா கிராமத்தைச் சேர்ந்த அப்பெண்ணையும் கடத்தியவர்களையும் போலிஸ் தேடி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!