பண்பாட்டைக் காக்கும் சமய விழாக்கள்: டான்

உலகம் என்னதான் நவீனமாக மாறினாலும் தைப்பூசம் போன்ற சமய விழாக்கள் மக்கள் பண் பாட்டிலும் சமயங்களிலும் ஆழ மான பற்றுகொள்ள உதவுவதாக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்துள்ளார். தைப்பூச விழாவின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கும் அருள் மிகு தெண்டாயுதபாணி கோயி லுக்கும் வந்திருந்த அவர் செய்தி யாளர்களிடம் பேசினார்.

"பல இன, பல சமய கலந்துரை யாடல்களின் வழியாக வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே புரிந் துணர்வு ஏற்பட்டு, இடைவெளிகள் பாலங்களைப்போல் இணைக்கப் படுகின்றன. இம்மாதிரியான கலந்துரையாடல்கள் ஏற்பட மேலும் பல வாய்ப்புகள் அமைய வேண்டும்," என்றார் திரு டான். பக்தர்கள் சிலருடன் அவர் பேசி னார்.

மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவாவும் சிங்கப்பூருக்கான இந் தியத் தூதர் திரு ஜாவித் அஷ்ர ஃப்பும் விழாவில் பங்கேற்றனர். சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலி லிருந்து காவடிகள், பால் குடங் கள் ஆகியவற்றை ஏந்திக் கொண்டு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி பக்தர்கள் நேற்று முன் தினம் இரவு 9.30 மணி முதலே செல்லத் தொடங்கினர்.

இவ்வாண்டு தைப்பூசத் திரு நாளன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தை ஒட்டி இந்து ஆல யங்கள் இரவு 7 மணிக்கு மூடப் படும் என்பதால் பக்தர்கள் தங் களது வேண்டுதலையும் நேர்த்திக் கடனையும் முன்கூட்டியே செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையே, தைப்பூசத் திரு நாளையொட்டி பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துத் தெரிவித்திருந் தார். அவர் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிடுகையில், "தமிழ் மாத மான 'தை', நட்சத்திரமான 'பூசம்' ஆகியன இணைந்து உருவான தைப்பூச நாளில் இந்து பக்தர்கள் நன்றி செலுத்துவதும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதும் வழக்கம். "சிராங்கூன் ரோட்டிலுள்ள கோயிலிலிருந்து தேங் ரோடு கோயில் வரை பால்குடங்களை யும் காவடிகளையும் பக்தர்கள் சுமந்து செல்வதை சிங்கப்பூரர் கள் நன்கறிவர்.

பிரார்த்தனை நிறைவேற்றும், அர்த்தமுள்ள தைப்பூசத்தைக் கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

"இன்றிரவு (நேற்றிரவு) 7.45 மணியளவில் தோன்றும் முழு சந்திர கிரகணத்தின்போது இந்துக் கோயில்கள் மூடப்படு வதால் தைப்பூசம் தொடர்பான நடவடிக்கைகள் பாதிப்படையும்," என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தரை படம் பிடிக்கிறார் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின். அவருக்கு அருகில் மேயர் டெனிஸ் புவா. படம்: த.கவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!