ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நேற்றுக் காலை வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தின்போது லாரி ஒன் றில் இரு ஆடவர்கள் சிக்கிக்கொண்டனர். இவ்விபத்து பற்றி காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டது. மரினா கோஸ்டல் விரைவுச் சாலையை நோக்கிய ஆயர் ராஜா விரைவுச் சாலையில் ஜுரோங் டவுன் ஹால் வெளிவழிக்கு அடுத்து நிகழ்ந்த இவ்விபத்தில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன. இரு டிப்பர் லாரிகள், ஓர் இழுவை வாகனம், ஒரு லாரி ஆகியன அந்த வாகனங்கள். இந்த விபத்து காரணமாக புவன விஸ்தா வெளிவழி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அந்த நெரிசல் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வாகனமோட்டிகள் விரைவுச் சாலையின் இரண்டாவது, மூன்றாவது தடங்களைத் தவிர்க்குமாறு நண்பகல் நேரத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டரில் குறிப்பிட் டது. லாரி ஒன்றுக்குள் சிக்கிக்கொண்ட இரு ஆடவர்களை 'ஹைட்ராலிக்' கருவிகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீட்டனர். சுயநினைவுடன் இருந்த அவ்விருவரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
56 வயதான லாரி ஓட்டுநரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவருடன் பயணம் செய்த 33 வயது ஆடவரின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்ப வத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர். நான்கு வாகனங்கள் மோதல்: லாரிக்குள் சிக்கிய இருவர் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்