மகாதீர் விருப்பம்: ஈராண்டுக்கு பிரதமர்

கோலாலம்பூர்: மலேசியாவின் 14வது பொதுத்தேர்தலில் எதிர்க் கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்றால், "அதிகபட்சம் இரண்டு ஆண்டு களுக்கு பிரதமராக இருப்பேன்," என்று முன்னாள் மலேசியப் பிரதமரும் தற்போதைய எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமது கூறியுள் ளார். தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் 92 வயதில் உலகின் ஆக வயதான பிரதமராக அவர் இருப்பார்.

கடந்த மாதம் ஜப்பானிய பத்திரிகையான மைனிச்சி ‌ஷிம் புனுக்கு பேட்டி அளித்த அவர், ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு எதிரான போரில் இப்போதும் இருப்பதாகக் கூறி மகாதீர் விருப்பம்: ஈராண்டுக்கு பிரதமர் யுள்ளார். ஆனால் அது மிகக் கடுமையான போராக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத் துக்குள் நடத்தப்படவேண்டிய இந்த பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி கூட்டணி மேலோங்கி இருப்பதாகவே கருதப்படுகிறது.

"ஒரு கட்சியைத் தொடங்க விரும்பினேன். அது மற்ற எதிர்க் கட்சிகளுடன் இணைந்து தேசிய முன்னணியை எதிர்த்து போட்டி யிட இருந்தது. நான் தலைமை தாங்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கருதினர்," என்று திரு மகாதீர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கெடா மாநிலத்தில் உள்ள லங்காவி அல்லது குபாங் பாசு நாடாளுமன்றத் தொகுதி அல்லது புத்ராஜெயா ஆகிய ஏதாவது ஒன்றில் டாக்டர் மகாதீர் போட்டி யிடக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுறது.

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக் கும் தேசிய முன்னணி கூட்டணி கடந்த தேர்தலில் முதன்முறையாக பெருவாரியான வாக்குகளை இழந் தது. இருப்பினும், எதிர்க்கட்சிக் கூட்டணி பிளவுபட்டு பாஸ் கட்சி அதன் வழியில் செயல்படுவதோடு, இஸ்லாமிக் விவகாரங்களில் அம்னோவுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!