நீண்ட பயணம்: கங்கையின்மீது மெர்லயன்

ரவி வெல்லூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணை ஆசிரியர்

பிரதமர் லீ சியன் லூங் அதிகாரபூர்வ மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரிலிருந்து இறங்கி, தன் நாட்டின் 69வது குடியரசு தின அணிவகுப்பில் வருகையாளர் களை வரவேற்கக் காத்திருந்த இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கைகுலுக்குவதைப் பார்க்கையில், சிங்கப்பூரும் இந்தியாவும் இன்றைய நிலையை அடைவதற்காகக் கடந்து வந்துள்ள நீண்ட பாதையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1950ஆம் ஆண்டில் குடியரசாக உருவெடுத்ததை முன்னிட்டு நடத்தப்படும் வருடாந் தர கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஆசியான் நாடுகளின் பத்துத் தலைவர்களையும் சிறப்பு வருகையாளர்களாக இந்தியா அழைத்திருந்தது. ஆசியான் பேராளர் குழுவைத் திரு லீ சென்ற வாரம் புதுடெல்லிக்கு வழிநடத்திச் சென்றார்.

தென்கிழக்காசியாவுக்குப் புது டெல்லி இந்த வலுவான அறிகுறியைக் கோடிகாட்டிய சமயத்தில் சிங்கப்பூர் தலைமைப் பொறுப்பில் இருந்தது எதிர்பாராத நிகழ்வாக இருந்தாலும், பொருத்த மானதாக இருந்தது எனலாம். ஆசியான் குழுமத்தின் ஆகச் சிறிய நாடான சிங்கப்பூரைப்போல வேறெந்த நாடும் இந்தியாவின் சமகாலத் தேசிய கதையைப் பாராட்டுவதிலோ அல்லது ஆசியானுடன் இந்தியா ஆழமான உறவை வளர்த்துக்கொள்வதிலோ இந்த அளவுக்கு ஆர்வம் காட்டியதில்லை. முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!