பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியின் பட்டி யலில் முன்னிலை வகித்து வரும் பார்சிலோனாவை இரண்டாவது இடத்தில் இருக்கும் அட்லெட் டிகோ மட்ரிட் புள்ளிகள் அடிப் படையில் நெருங்கி வருகிறது. வெலன்சியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தை 1=0 எனும் கோல் கணக்கில் கைப்பற்றிய அட்லெட்டிகோ, பார்சிலோனாவுக்கும் தனக்கும் உள்ள புள்ளி இடைவெளியைக் குறைத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்பென்யோல் குழுவைத் தோற்கடிக்கத் தவறி யது பார்சிலோனா.
அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதனால் வெற்றி பெற்று மூன்று புள்ளிகள் குவிப்ப தற்குப் பதிலாக ஒரே ஒரு புள்ளி மட்டும் பெற்று பார்சிலோனா ஏமாற்றத்துடன் திரும்பியது. இந்த ஆட்டத்தில் எஸ்பென் யோலின் ஜெரார்ட் மொரேனோ கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் பார்சிலோனாவின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெரார்ட் பிக்கே கோல் போட்டு ஆட்டத் தைச் சமன் செய்தார். லீக் பட்டியலில் பார்சிலோனா 58 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அட்லெட் டிகோ 49 புள்ளிகளுடன் இரண் டாவது இடத்தில் உள்ளது.