‘அறிவாலயத்தில் லஞ்சம்; ஸ்டாலின் சரியில்லை’

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் மறுசீரமைப்புப் பணி களை முடுக்கிவிட்டிருக்கிறார். தோல்விக்குக் காரணமான கீழ் மட்ட நிர்வாகிகளை நீக்கினாலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது தான் அதிக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மாவட்டவாரி யாகத் தொண்டர்களை சந்தித்துப் பேசும் முடிவுக்கு வந்த ஸ்டாலின், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொண்டர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். இதில் பேசப்படும் தக வல்கள், கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் போன்றவற்றை மிகுந்த ரகசியமாகப் பாதுகாத்து வருகிறார் அவர். இதுகுறித்த விவரம் கட்சி யின் மூத்த நிர்வாகிகளுக்குக்கூட தெரிவதில்லை. 'புகார்களின் மீது 15 நாட்களுக்குள் உறுதியான நட வடிக்கை எடுப்பேன்' என ஸ்டா லின் உறுதியளித்திருக்கிறார்.

நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப் படையாக சொல்ல முடியாத கட்சிப் பிரச்சினைகளை விவரமாக எழுதி ஒரு பெட்டியில் போட்டுவிட லாம் என புதிய வழிமுறையையும் ஏற் படுத்தி இருக்கிறது திமுக தலைமை. அதன்படி, நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் ஏகப்பட்ட புகார்கள் குவிகின்றன. உள்ளூரில் நடக்கும் அத்தனை அரசியலும் அந்தப் புகார் பெட்டி யில் குவியும் கடிதங்கள் மூலம் தெரிய வருகின்றன. இப்படி குவி யும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலினின் செயல் பாடுகளை விமர்சித்தும் சிலர் புகாராக குறிப்பிட்டு கடிதங்களை பெட்டியில் போட்டிருக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!