மருத்துவமனைகளின் ஆவணங் களில் போலி கையெழுத்திட்டு $340,000க்கும் மேல் பெறுமான முள்ள சிகிச்சைகளைப் பெற்ற 46 வயது ஜெஷங்கர் மாரிமுத்து விற்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பொது மருத்துவ மனை, டான் டொக் செங் மருத்து வமனை, கிளனிகல்ஸ் மருத்துவ மனை உட்பட எட்டு மருத்துவ மனைகளில் அவர் தனது கைவரி சையைக் காட்டியுள்ளார். மேலும் அவர் அறிந்த இரு ஆடவர்களின் அடையாள விவ ரங்களைக் கொண்டு $44,000க் கும் மேலான 'மெடிசேவ்' கழிவு களையும் அவர் பெற்றுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தனக்குத் தேவையான சிகிச்சைகளை அவர் பல மருத்துவமனைகளிலும் பெற்றுள்ளார்.
2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் அந்தக் குற்றங்களைப் புரிந்துள் ளார். திரு மாரிமுத்து பயன்படுத்திய 'மெடிசேவ்' கணக்கு தீர்ந்துவிட் டதைக் கண்டுபிடித்த திரு சௌந்தரராஜன் என்பவர் போலிஸ் படையிடம் தொடுத்த புகாரை அடுத்து அவர் கைதானார்.