‘குற்றவியல் சட்டம் மேலும் வலுவாக்கப்படும்’

போலிஸ் மேற்பார்வை, குற்றவியல் தடுப்புக் காவல் ஆணை ஆகிய வற்றை மறுஆய்வு செய்யும் சுயேட்சை ஆலோசனைக் குழுக் களுக்கு வரும் மார்ச் மாதத் திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமைதாங்குவர் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். குற்றவியல் சட்டம் (குற்ற வியல் பிரிவுகள்) தொடர்பான மசோதாவைப் பற்றிய விவாதத்தின்போது பேசிய திரு சண்முகம், கொண்டுவரப்படும் மாற்றங்களால் மசோதாவின்கீழ் வரும் நடவடிக்கைகள் மேலும் வலுவாகும் என்று கூறினார்.

ஆலோசனைக் குழு முக்கிய மான பாதுகாப்பு அம்சமாகும் என்று கூறிய திரு சண்முகம், மசோதா மூலம் பரிந்துரைக்கப் பட்டுள்ள மாற்றங்கள் நியாய மானவை என்று வலியுறுத்தினார். குற்றச்செயல்களைப் பட்டியலிட்டு அவற்றைக் குற்றவியல் சட்டத் தின்கீழ் (தற்காலிகப் பிரிவுகள்) கொண்டு வருவது ஓர் உதாரணம். காற்பந்தாட்ட சூதாட்டத்தில் பெரிய அளவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் டேன் டானை சட்டத்தின் தெளிவின்மையைக் காரணம் காட்டி 2015ஆம் ஆண்டில் மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

"குற்றச் செயல்களைப் பட்டியலிட முடிவெடுத்தோம். இந்த அணுகுமுறையால் கூடுதல் தெளிவும் நிலைத்தன்மையும் ஏற்பட்டுள்ளது," என்று அமைச்சர் சண்முகம் குறிப்பட்டார். குண்டர் கும்பல் நடவடிக் கைகள், உரிமம் இல்லாது கடன் வழங்குவது, போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் முதலி யவை பட்டியலிடப்படும் குற்றங் களில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!