புக்கிட் பாஞ்சாங் நிலையம் செல்ல புதிய சுரங்கப்பாதை

செஞ்சா குடியிருப்புப் பேட்டையில் வசிக்கும் புக்கிட் பாஞ்சாங் பகுதி மக்கள் இப்போது புதிய சுரங்க வழி மூலம் புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையம் செல்லலாம். இது, அந்த நிலையத்திற்குச் செல்லும் மூன்றாவது வழியாகும். 'வழி=3' எனப்படும் அந்தப் புதிய சுரங்கப்பாதை, அந்த எம்ஆர்டி நிலையத்தை 100மீ. சுரங்க வழி யுடன் இணைக்கிறது. இதனையடுத்து குடியிருப் பாளர்கள் புக்கிட் பாஞ்சாங் ரோடு, உட்லண்ட்ஸ் ரோடு சாலை சந்திப்பைத் தவிர்த்துக்கொள்ள லாம். புதிய பாதை சுமார் 8,000 குடும்பங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஹாலண்ட் புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர்களான விவியன் பாலகிருஷ்ணன்,

லியாங் எங் ஹுவா, டியோ ஹோ பின் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். ஓராண்டு கால தாமதத்திற்குப் பிறகு இப்போது புதிய சுரங்கப் பாதை திறக்கப்பட்டு இருக்கிறது. அந்நிலையத்திற்குச் செல்லும் இந்த மூன்றாவது பாதையை அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் 2013ல் ஒப்புக்கொண் டது. அது 2016ல் திறக்கப்பட விருந்தது. ஆனால் கட்டுமானச் சிரமங்கள் காரணமாக அந்தப் பாதையின் கட்டுமானப் பணி தாமதப்பட்டது. தேசிய பூங்கா வாரியத்தின் சமூகத் தோட்ட திட்டத்தின் கீழ், 3 மணி நேரத்தில் 220 இடங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. அவை சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஐந்து பூங்காக்களில் அமைந்து இருக்கின்றன. அடுத்தபடியாக கொடுக்கப்படும் 300 இடங்களுக்கான பதிவு இந்த ஆண்டு முடிவில் தொடங்கும். இந்த இடங்கள், அங் மோ கியோ டவுன் கார்டன் வெஸ்ட், ஜூரோங் லேக் கார்டன்ஸ் ஆகியவற்றில் அமைந்திருக்கும். 220 தோட்ட இடங்களும் தீர்ந்துவிட்டன படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!