உடன் செல்லும் சமையல்காரர்கள்

முன்னணி நடிகையான காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகிய இருவரும் எங்கு சென்றாலும் சமையல்காரருடன் செல் வதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ச் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் சம்பளம் அதிக அளவில் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் உணவு விஷயத்தில் மிகவும் கறாராக இருந்து வருகின்றனர். திரைப்படங்களில் நாயகர்கள் வித்தியாசமான தோற்றங்களில் நடித்தால் கைதட்டும் ரசிகர்கள் கதையின் நாயகிகள் மட்டும் அழகாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர்.

திரைத் துறையில் நீடித்திருப்பதற்கு தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக, இளமையாக, அழகாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் நடிகைகளுக்கு உள்ளது. அதனால் தங்களுக்கு ஏற்ற உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கு ஏதுவாக சமையல்காரரையும் படப்பிடிப்பு தளங்களுக்கு சமந்தா அழைத்துச் செல்லத் தொடங்கினார். அது நல்ல யோசனையாகத் தோன்றவே, காஜல் அகர்வாலும் தமன்னாவும் தங்களது சமையல்காரர்களைப் படப்பிடிப்புத் தளங்களுக்கு உடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சீனு ராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். 'கண்ணே கலைமானே' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் கிராமங்களிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சென்ற மாதம் தொடங்கிய அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரை வாடிப்பட்டியை அடுத்துள்ள பெருமாள்பட்டி, கச்சபட்டி, குட்லாடம்பட்டி அருவி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!