இந்திய பட்ஜெட் - கட்சிக்கும் தேவை, நாட்டுக்கும் அவசியம்

இந்தியாவில் பொதுத்தேர்தல் மூலம் பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கும் எந்த ஓர் அரசாங்கமும் தனது உடனடி அரசியல் முன்னுரிமைகளுக்கும் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்கத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கும் இடையில் செம்மையான ஒரு சமநிலையைக் காணவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஆண்டுதோறும் புதிய வரவுசெலவுத் திட்டத் தைத் தாக்கல் செய்துவருகின்றன.

அந்த நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தும் இப்போதைய பாஜக அரசாங் கம், தன்னுடைய முழுமையான கடைசி நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இது, பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது வரவுசெலவுத் திட்ட அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில், இந்த ஆண்டில் எட்டு மாநிலங் களுக்கும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்க இருக் கும் நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். புதிய திட்டத்தில் அறிவிக் கப்பட்டு இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்தியாவை மட்டுமின்றி உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது.

முந்தைய பிரதமர் வாஜ்பாய் தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முயன்ற தைப் போல, தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடப் பில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தின் அடிப்படையில் இப்போது தேசிய அள வில் உருவாக்கப்பட்டுள்ள அந்தத் திட்டம், 100 மில்லியனுக்கும் அதிக குடும்பங்களுக்கு ஆண்டுக்குத் தலா சுமார் $11,000 (ரூ.5 லட்சம் வரை) மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. மாதச் சம்பளக்காரர்களுக்கு ரூ. 40,000 வருவாய் வரி விலக்கு, முதியோ ருக்கு வருமான வரிச் சலுகை, மருத்துவ உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சுமார் 60 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் வேலைபார்த்து பிழைப்பு நடத்துகிறார்கள். இத்தகைய நிறு வனங்கள், பாஜக அரசாங்கம் நடப்புக்குக் கொண்டுவந்த பணமதிப்பு இழப்பு நட வடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவற் றால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை மனதில் வைத்து இத்தகைய நிறுவனங்களுக்கு உரிய வரியை 5% அரசு குறைத்து இருக்கிறது.

அதேவேளையில், இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய பங்கு வர்த்தகத்தில் பெறப்படும் நீண்டகால மூலதன வருவாய்க்கு, இதுவரை இல்லாதபடி 10% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன்களுக்கு ரூ.11 லட்சம் கோடி, பெண்கள் சுயஉதவி குழுக்களுக்காக ரூ.75,000 கோடி, மருத்துவம், கல்வி, சமூகப் பாதுகாப்புக்காக ரூ.1,38,000 கோடி, அடிப் படைவசதிகள் மேம்பட ரூ.5,97,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்கத் துறை மேம்பாடு, கிராமங் களில் இலவச சமையல் எரிவாயு, மின்சாரம், கழிவறைகள் மேம்பாடு, மாநில அரசுகளோடு இணைந்து தரமான கல்வியை வழங்குவதற் கான திட்டம் எல்லாம் வரவுசெலவுத் திட்டத் தில் இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!