போலித் திருமண கும்பல் முறியடிப்பு

சிங்கப்பூர் ஆண்களை வியட்னா மிய பெண்களுடன் இணைத்து போலித் திருமணங்களை நடத்திய மோசடி கும்பலை சிங்கப்பூர் குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் முறியடித்துள்ளது. இந்தக் கும்பல், உண்மையான திருமணம்போல நம்ப வைப்பதற் காக சிங்கப்பூர் ஆண்களை வியட் நாமுக்கு அழைத்துச் சென்று திரு மணப் புகைப்படங்களை எடுத்து, தம்பதியர் வசிக்கும் இல்லம் என முகவரியை அதிகாரபூர்வமாக மாற்றி, சில சம்பவங்களில் சிங்கப் பூர் விமான நிலையத்தில் வியட் னாமிய மணமகளை சிங்கப்பூர் மணமகன்கள் வரவேற்கவும் ஏற் பாடு செய்தது.

இத்தகைய ஆறு போலித் திருமண ஏற்பாடுகளைக் கண்டு பிடித்த ஆணையம், கும்பலின் பல்வேறு உத்திகளையும் விசார ணையில் கண்டறிந்தது. சில தம்பதியர் குறுகிய காலத் திற்கு ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தனர்.

ஆறு தம்பதியர், மூளையாகச் செயல்பட்ட இருவர் ஆகியோரை உள்ளடக்கிய மோசடி திருமணங் களைக் கண்டுபிடிக்க ஆணையத் திற்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டது. கடந்த ஆண்டு போலித் திருமண சம்பவங்களில் குற்ற வாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 53 பேரில் இந்தக் கும்பலைச் சேர்ந்த வர்களும் அடங்குவர். 2016ஆம் ஆண்டின் 43 பேருடன் ஒப்பிடுகையில் 2017ல் போலித் திருமணங்கள் 23.3 விழுக்காடு அதிகரித்தது. போலித் திருமண கும்பலைச் சேர்ந்த மணமகன்களில் ஒருவர், தனது மனைவியை சிங்கப்பூரி லிருந்து வெளியேற்றுவதற்கு எதி ராக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து கும்பலின் மோசடி வெளிப்பட்டது.

மோசடி கும்பல்: (மேலே வலமிருந்து) நுயென் தி கிம் பா, ஹோ தி பி பா, சோய் யோங் ஹுவி எல்விசன், வோங் கியன் மன், சான் டெங் செங், காங் ஆ ஹோக், ஏட்ரியன் கின் ஷெங் கியட், லியு ஜியான்வெய் ஆண்ட்ரு, வோ தி ஙோ தாவ், நுயென் தி பிச் டான். படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!