தஞ்சை: ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்று வந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அத்தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆளுகின்ற துரோக அரசை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அத்தொகுதி மக்கள் தோற்கடித்த காரணத்தால் அவர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் சாடியுள்ளார். "ஆர்கே நகர் தொகுதி மீதும் அத்தொகுதி மக்கள் மீதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தனது வஞ்சத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் மூலமாகவும் காவல் துறையின் மூலமாகவும் பழனிசாமி அரசு மேற்கொள்ளும் இந்தப் பழிவாங்கும் போக்கு மிகவும் கீழ்த்தர மானது. "பழிவாங்கும் கொடுஞ்செயல் களை தொடர்வார்களேயானால் நீதிமன்றத்தின் மூலம் சம்மந்தப் பட்ட காவல்துறையினர் மீது சட் டப்பூர்வ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்," என தினகரன் எச்சரித்துள்ளார். "ஜெயலலிதாவின் ஆட்சியைப் பாதுகாக்கவேண்டும் எனப் போராடிய 18 எம்எல்ஏக்களைப் பதவி நீக்கம் செய்துள்ளனர். எந்த நேரமும் இதுதொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வரும். எனவே இந்த ஆட்சி விரைவில் கவிழும். "இந்த ஆட்சியாளர்கள் தமிழ கத்திற்கு கெட்ட பெயரை ஏற்ப டுத்துகிறார்கள். இந்திய துணைக் கண்டத்தில் ஊழலுக்கு பெயர் போன அரசாங்கமாக தமிழக அரசு திகழ்கிறது.