You are here

பயிற்சிகளுக்கு அப்பால் மனிதாபிமான உதவி

ப. பாலசுப்பிரமணியம்

ஆகாயப் படையில் சேவையாற்றும் எம்இ3 அதிகாரி சுரேஷ் மணியம் 2005ஆம் ஆண்டை எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில், அவர் திருமணம் புரிந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியா வின் பண்டார் அச்சேவுக்கு துயர்துடைப்புப் பணிக்காக அவர் செல்ல வேண்டி இருந்தது.

தன் திருமணத்தை அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் செய்யத் திட்டமிட்டிருந்தார் சுரேஷ். வருங் காலத் துணைவியார், இரு தரப்புக் குடும்பத்தார் ஆகியோரிடம் சூழ்நிலையை விளக்கினார் அவர். 2005ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் அவரது திருமணம் நடை பெற்றது.

“என் மனைவி தாதியராக இருந்ததால் அவர் இந்த துயர் துடைப்புப் பணியின் முக்கியத்துவத்தை அ றி ந் து கொ ண் ட தோ டு அந்த வேளையில் என் நிலைமையைப் புரிந்து ஆதரவு நல்கினார்,” எனத் திருமணத்தை சில மாதங்களுக்குத் தள்ளிப்போட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார் தற்போது 207 ஆகாய படைப்பிரிவில் சேவையாற் றும் எம்இ3 அதிகாரி சுரேஷ், 46. பண்டார் அச்சேயில் பிப்ரவரி 1ஆம் தேதி அவர் கால் பதித்த போது, சிங்கப்பூர் ஆகாயப் படையினர் ஏற்கனவே அங்கு ஒரு நடமாடும் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை (mobile air control tower) அமைத்திருந்தனர்.

வான்வழிச் செயல்பாடுகள், செயல்முறை அதிகாரியாக அவர் நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் விமானங்கள் பாதுகாப்பான முறையில் தரை இறங்குவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதிநவீன ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சாதனப் பயன்பாட்டின்வழி இவர், விமானச் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குகிறார்.