மண்ணைக் கவ்விய யுனைடெட்

நியூகாசலை அதன் சொந்த மைதானத்தில் சந்தித்த மான் செஸ்டர் யுனைடெட் 0=1 என அதனிடம் தோல்வியைத் தழு வியது. பிரிமியர் லீக் காற்பந்து தரவரிசைப் பட்டியலில் இரண்டா மிடத்தில் இருக்கும் யுனைடெட் முதலிடத்தில் இருக்கும் மான் செஸ்டர் சிட்டியிடமிருந்து 16 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. நியூகாசல் வீரர் ரிட்சி ஆட்டத் தின் 65வது நிமிடத்தில் போட்ட ஒரே கோலுடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பதிலுக்கு யுனைடெட் எவ்வளவோ முயன்றும் அந்த அணியால் கோல் எதுவும் போட முடியவில்லை. மான்செஸ்டர் யுனைடெட்டின் ஜெஸ்ஸி லிங்கார்ட், ஆண்டனி மார்சியால், ஆஷ்லி யங், மைக்கல் கேரிக் போன்றோர் நியூகாசல் கோல் நோக்கி அடித்த பந்தை நியூகாசலின் கோல்காப்பாளர் மார்ட்டின் டுப்ராவ்கா தடுத்து நிறுத்தினார். முயற்சி ஒருபக்கம் இருப்பினும் யுனைடெட்டின் ஆட்டத்தில் ஒரு சுறுசுறுப்பு இல்லை என காற்பந்து ரசிகர்கள் கூறினர்.

நேற்றைய ஆட்டத்தில் நியூகாசலின் கோல்காப்பாளரை தாண்டிய நிலையிலும் கோல் போட முடியாமல் தவித்த யுனைடெட்டின் அலெக்சிஸ் சான்செஸ் (இடது). மான்செஸ்டர் யுனைடெட் அதிக விலை கொடுத்து வாங்கிய சான்செஸ் யுனைடெட் குழுவுடன் ஒன்றி விளையாட முடியவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!