நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது 'களவாணி மாப் பிள்ளை'. இதில் நாயகன் தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி மேனன். கதை, திரைக்கதையை எழுதி படத்தை இயக்குபவர் காந்தி மணிவாசகம். 'நம்ம ஊரு பூவாத்தா', 'ராக்காயி கோயில்', 'பெரிய கவுண்டர் பொண்ணு' உள்ளிட்ட 16 படங்களைத் தயாரித்த 'ராஜபுஷ்பா பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் காந்தி மணிவாசகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தைப் பற்றி விளக்குகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான காந்தி மணி வாசகம்.
"ஒரு நல்ல காதல் கதை எடுக்க வேண்டும். அதுவும் நகைச்சுவையை முன்னிலைப்படுத்தி உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்தது. அதற்கு சரியான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அந்தத் தருணம் அமைந்தி ருக்கிறது.
'களவாணி மாப்பிள்ளை' படத்தில் தினேஷ், அதிதி மேனன்.