கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய வெளிநாட்டு பயங்கரவாத சந்தேக நபர்கள் போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் கூறியது. சந்தேக நபர்களை மலேசிய அதிகாரிகள் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க அவர்கள் இந்த வழியைப் பின் பற்றுவதாகவும் வெளிநாட்டு பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மலேசிய எல்லையைக் கடந்துள்ள தாகவும் போலிசாரும் அமலாக்க அதிகாரிகளும் தெரி வித்திருப்ப தாக அந்தப் பத்திரிகை தகவல் கூறுகிறது.
அத்தகைய சந்தேக நபர்களில் பிலிப்பீன்ஸ் நாட்டவர்களும் அடங்குவர். சாபாவிலிருந்து சட்டவிரோத கடல்வழி மார்க்கமாக அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்திருப்ப தாகவும் மலேசியப் போலிசார் கூறினர். ஒரு சமயம், சாபாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் மலேசிய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் எப்படியோ போலி அடையாள ஆவணங்களைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.