மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத் தில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஊழியர் சேம நிதிக் கழகக் கட்டடத்தில் (EPF) நேற்று முற்பகல் 11.50 மணிக்குத் தீ மூண்டது. கட்டடம் ஒரு நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அந்தத் தீ விபத்து காரணமாகப் போக்கு வரத்தில் தேக்கம் ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் பராமரிப்புப் பணி நடந்து வந்ததாகவும் அதன் புறப்பகுதியில் கிளம்பிய நெருப் புப் பொறி கட்டடத்தின் அப்பகுதி யில் இருந்த தீப்பிடிக்கக்கூடிய சட்டங்களில் தீயை மூட்டிவிட்டது என்றும் தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
வெப்பமான பருவநிலை, காற்று எல்லாம் சேர்ந்ததால் தீ கட்டடத் தின் இதர பகுதிகளுக்கும் பரவி விட்டது என்றார் அவர். தீ அந்த ஆறு மாடி கட்டடத்தின் முதல் மாடியில் கிளம்பியது என்று அவர் குறிப்பிட்டார். கட்டடத்தின் ஏறக்குறைய 40% பகுதி பாதிக்கப் பட்டுவிட்டது. தீ பின்னர் கட்டுப் படுத்தப்பட்டது.
மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஊழியர் சேம நிதிக் கழகக் கட்டடத்தில் தீ மூண்டது. படம்: த ஸ்டார்