சென்னை: இன்று முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக தமிழக மின்வாரிய ஊழி யர்கள் திட்டவட்டமாக அறிவித் துள்ளனர். இதனால் மின்விநி யோகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என மக் கள் கவலையில் உள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டி ருக்க வேண்டும். ஆனால் இது வரை அதற்கான அறிவிப்பு வெளியாகாததால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த இரு ஆண்டுகளாக தொழிற்சங்கத்தினர் அரசுத் தரப்புடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பல னில்லை. எந்தவித முன்னேற்ற மும் ஏற்படாத நிலையில், கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக தொழிற்சங்கத்தினர் எச்ச ரிக்கை விடுத்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே நேற்று பேச்சு வார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அது ரத்து செய்யப்பட்டது.
இத னால் கடும் அதிருப்தி அடைந் துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ள னர். வேலை நிறுத்தத்தால் தமி ழகம் முழுவதும் மின்விநியோகப் பணிகள் கடுமையாக பாதிக்கப் படக் கூடும் எனும் கவலை நிலவுகிறது. அண்மையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியிருந்தனர். தற்போது மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.