தடுமாறிய ஸ்பர்ஸ் அணி

ரோச்டேல்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை லீக் ஒன் அணியான ரோச்டேலை எதிர்கொண்ட பிரிமியர் லீக் அணி யான டோட்டன்ஹம் ஹாட்ஸ் பர் அணி தட்டுத் தடுமாறி ஒருவழியாக 2=2 என சமநிலை கண்டது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் ரோச்டேல் அணி யின் இயன் ஹேண்டர்சன் ரோச்- டேல் அணியின் எதிர்த்தாக்குதலை அழகாகப் பூர்த்திசெய்யும் வித- மாக ஸ்பர்ஸ் அணிக்கு எதிரான முதல் கோலைப் போட்டு அதை திக்குமுக்காட வைத்தார்.

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஸ்பர்ஸ், 59ஆம் நிமிடத்தில் லுக்கஸ் முரா என்பவர் மூலம் கோல் போட்டு 1=1 என சமநிலை கண்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 88ஆம் நிமிடத்தில் ஸ்பர்ஸின் டெலி அலி என்பவரை ரோச்டேல் கோல் எல்லையில் வீழ்த்தியதற்காக ஸ்பர்ஸுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதை தவறவிடாமல் ரோச்டேல் கோல் வலைக்குள் புகுத்தி ஸ்பர்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ஹேரி கேன். இனி தங்கள் வெற்றிக்கு குறுக்கே எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று ஸ்பர்ஸ் அசந்திருந்த வேளையில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ரோச்டேலின் ஸ்டிவன் டேவிஸ் கோல் போட்டு வெம்பிளி மைதானத்தில் மீண்டும் ஒரு போட்டிக்கு வித்திட்டார்.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்பர்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது கோலைப் போட்டு அந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரோச்டேல் அணி வீரர்கள் (நீல நிற மேல் சட்டையில்). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!