அமைச்சர் இந்திராணி ராஜா: ஜிஎஸ்டி உயர்வு மட்டும் தெரிவல்ல

வருமானத்தை உயர்த்துவதற்கு பொருள் சேவை வரியின் (ஜிஎஸ்டி) உயர்வு மட்டுமே தெரிவு அல்ல என்றும் ஆனால் அதுவே நீண்ட காலத்தில் நிலைத் தன்மையான வரு மானத்தை வழங்கும் என்றும் நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார். மேலும் பல வழிகள் ஆராயப் பட்ட தாக குறிப்பிட்ட அவர், சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்ட மைப்பு, பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க போதிய திடமான வருமானம் பெறுவ தற்கு நீண்டகாலப் போக்கில் ஜிஎஸ்டி மட்டுமே சிறந்த தெரிவு என்றார்.

'938நவ்' வானொலிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார். சிங்கப்பூர் எதிர்நோக்கும் மாற்றங்கள் இதுவரை இந்த நாடு எதிர்நோக்காதவை என்று குறிப் பிட்ட குமாரி இந்திராணி, மூப் படை யும் சமுதாயத்தைச் சுட்டினார். அடுத்த ஐந்து முதல் 15 ஆண்டுகளில் மூப்படையும் சிங்கப் பூரர்களின் எண்ணிக்கை இதுவரை இந்த நாடு எதிர்நோக் காத ஒன்று என்பதைத் தெரிவி த்தார். இந்த மாற்றத்தால் செலவுகள் அதிகரிக்கும் என்றும் அதனால் தான் ஜிஎஸ்டி உயரவேண்டும் என்றும் அவர் கூறினார். செலவு களைக் குறைப்பது ஒரு வழி என்றாலும் அதை நாம் செய்து வந்துள்ளோம் என்றும் தொடர்ந்து செய்வோம் என்றும் கூறிய அவர், தவிர்க்க முடியாத அதிகரித்து வரும் செலவினங்களுக்கு நிலையான வருமானம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விக ளுக்கு குமாரி இந்திராணி பதிலளித்தார்.

குமாரி இந்திராணி ராஜா படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!