You are here

இந்திராணி ராஜா: செல்வ வளத்தை சிங்கப்பூர் கட்டிக்காக்க வேண்டும்

சிங்கப்பூரின் முன்னோடித் தலை வர்கள் நிதிநுட்பத்துடன் விவேக மாகச் செயல்பட்டதால் இருப்பு நிதியைப் பெருக்க முடிந்தது. இதேபோலவே தொடர்ந்து செயல்பட அரசாங்கம் திட்டமிடு வதாக நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா புதன்கிழமை காலை கூறினார். திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித் தார்.

இருப்புநிதி முதலீடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதாயத்தில் 50 விழுக்காட்டுக்கு மேலாக சிங் கப்பூர் செலவு செய்யாதிருப்பதற் கான காரணத்தை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவுசெலவுத் திட்ட உரையில் விளக்கினார். சொத்து மூன்று தலைமுறை களுக்கு மேல் நீடிக்காது என்ற சீனப் பழமொழியைச் சுட்டிக்காட்டிப் பேசிய குமாரி இந்திராணி, “முதல் தலைமுறை சேர்த்து வைப்பதை, இரண்டாவது தலைமுறை பாது காத்து வைக்கும், மூன்றாவது தலைமுறை செலவு செய்துவிடும் என்பதைக் காலம் பலமுறை உணர்த்தியிருக்கிறது,” என்று கூறினார்.

டெக் வை லேனில் உள்ள ஃபெய் யுவே சமூக நிலையத்துக்கு நேற்று வருகையளித்த அமைச்சர் இந்திராணி ராஜா அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்