நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்தரும் வரவுசெலவுத் திட்டம்

ஒரு நாட்டின் அரசாங்கம் ஆண்டுதோறும் தனது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யும் வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) என்பது அந்த நாட்டின் வருடாந்திர நிதி அறிக்கை. நடப்பு நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்; செலவினம் எவ்வளவு இருக்கும் என்பதை எல்லாம் வரையறுப்பது அந்த அறிக்கைதான்.

சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பிப்ரவரி 19ஆம் தேதி திங்கட்கிழமை தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம், 2017ல் முடிவடைந்த நிதியாண்டில் செலவைவிட வருவாய் அதிகம் இருந்ததால் $9.6 பில்லியன் உபரி கிடைத்து இருப்பதாக தெரிவித்தது. அந்த உபரியைக் கொண்டு ரயில் கட்ட மைப்புக்காக $5 பில்லியன் போட்டு சேமிப்பு நிதி ஒன்றை ஏற்படுத்தவும் குடும்ப, மருத்துவ மானியங்களுக்காக $2 பில்லியன் ஒதுக்கவும் பிறகு $700 மில்லியன் தொகையை, 21க்கும் மேற்பட்ட வயதுள்ள சுமார் 2.7 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு, 2017ஆம் ஆண்டு வரு வாய் நிலைக்கு ஏற்ப $100 முதல் $300 வரை ரொக்க போனசாக பிரித்துக்கொடுக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது.

'ஆங் பாவ் பட்ஜெட்' என்று அமைச்சர் அறிவித்த வரவுசெலவுத் திட்டம், எடுசேவ் மானியம், ஊழியர் இணை நிதி போன்றவை மூலம் மக்களின் கல்வி, தேர்ச்சி மேம்பட அக்கறை கொண்டுள்ளது. குடும்ப வாழ்க்கை யைப் பேணி வளர்க்க ஏதுவாக சேர்ந்து வசிக்க விரும்பும் பெற்றோர், பிள்ளைகள், குடும்பத்தினர், ஒற்றையர் அனைவருக்கும் அருகாமையில் வீடு வாங்க மானியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஊழியர் களையே அதிகம் சார்ந்திராமல் காலத்துக்கு ஏற்ப மின்னிலக்கம், புத்தாக்கம் என்று மாறிக் கொண்டு, இந்த வட்டாரத்திலும் உலக அளவிலும் விரிவடைய கைகொடுக்கிறது. நிறுவன வரித் தள்ளுபடி 40%க்கு அதிகரிக் கப்பட்டுள்ளது. கரிம வரி என்ற புதிய வரியை 2020ல் அறிமுகப்படுத்தி, உலக சுற்றுச் சூழ லைக் காக்க நாடு ஆற்றவேண்டிய கடமையை அது நிறைவேற்றுகிறது.

இவற்றுக்கெல்லாம் மேலாக நாட்டை எதிர்காலத்துக்குத் தயாராக்குவதில் புதிய திட்டம் ஒருமித்த கவனம் செலுத்துகிறது. சிங்கப்பூர் பொருளியல் வெற்றி எதிர்காலத் திலும் தொடரவேண்டுமானால் அதன் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படவேண்டும். ஆசியாவின் அதிகமான வளர்ச்சி வாய்ப்பு களை விரைந்து, கெட்டியாக பிடித்துக்கொள் ளும் நிலையில் நாடு இருக்கவேண்டும்.

சாங்கி விமானநிலைய முனையம்5, துவாஸ் துறைமுகம், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில், உள்ளூர் ரயில் கட்டமைப்பு விரிவாக்கம், நாட்டின் பல்வேறு பகுதிகளின் மேம்பாடு எல்லாம் இதற்கு அவசியம். இவற்றை எல்லாம் நிறைவேற்ற அரசாங் கத்துக்கு வருவாய் பெருக வேண்டும். இதற் காக புதிய வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்பாடு கள் இருக்கின்றன என்றாலும் அவை மக்க ளுக்குச் சிரமமாக இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் விழிப்பாக இருக்கிறது என்பதைத் திட்டம் உணர்த்துகிறது. ஜிஎஸ்டி வரியை 2% கூட்டுவதைவிட்டால் வேறு வழி இல்லை என்றாலும் அதை இப்போது செய்வது உசிதமாக இராது என்று அரசு எடுத்துள்ள முடிவு, மிகவும் விவேக மான, பொருத்தமான ஒன்றாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!