ஐரோப்பிய நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு

ரோம்: ஐரோப்பிய நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது பனிப்பொழிவு அதி கரித்துள்ளது. சைபீரியாவிலிருந்து வீசும் காற்றினால் ஐரோப்பிய நாடுகள் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் அங்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. சாலைகளிலும் தெருக்களிலும் குவிந்துள்ள பனிப்பொழிவை அகற்றும்படி ராணுவ வீரர்களை இத்தாலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள் ளனர். குடியிருப்பாளர்கள் வீடுகளிலேயே இருப்பது நல்லது என்றும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் சிக்கி ருமேனியாவில் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். இங்கு 80 வயது மூதாட்டி பனிக்குவியலில் மயங்கி விழுந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இங்கும் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பிரிட்டனின் கிழக்குப் பகுதிகளில் 10 செ.மீ உயரத்திற்கு பனி உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சைபீரிய பருவநிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அல்பேனியாவில் கொட்டிக்கிடக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நடந்து செல்கிறார். இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!