போலந்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் மரணம்

வார்சா: போலந்து நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. எரிவாயு வெடிப்புக் காரணமாக அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. போலந்தின் மேற்குப் பகுதியில் உள்ள அந்த குடியிருப்புக் கட்டடத்தில் 18 வீடுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கட்டடத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர். அந்த வெடிப்பைத் தொடர்ந்து அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் முழுமையாக சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் ஒரு வீட்டில் ஏற்பட்ட எரிவாயு கசிவு வெடிப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!