பட்டத்தை நெருங்கும் சிட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டம், மான்செஸ்டர் சிட்டி குழுவின் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. சொந்த எமிரேட்ஸ் விளையாட் டரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளரான செல்சியை வெற்றிகொண்டது. ஆட்டத்தில் விழுந்த அந்த ஒற்றை கோலை இரண்டாம் பாதி யின் முதல் நிமிடத்தில் போட்டார் சிட்டியின் பெர்னார்டோ சில்வா. இந்த வெற்றியை அடுத்து 78 புள்ளிகளுடன் முதல் நிலையில் இருக்கும் சிட்டி, இரண்டாம் நிலை யில் உள்ள லிவர்பூல் குழுவைவிட 18 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இருக்கிறது.

ஆகையால், இன்னும் ஒன்பது ஆட்டங்கள் மீதமிருந்தாலும் அதில் நான்கு ஆட்டங்களில் வென்றாலே போதும், பட்டம் சிட்டியின் கை களில் சேர்ந்துவிடும். இந்த உற்சாகத்துடன் பேசிய சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, "சாதனைகளுக்காக நாங்கள் விளையாடுவதில்லை. அது எங்க ளுக்கு முக்கியமல்ல. வெற்றியா ளர் பட்டம் வெல்வதே முக்கியம்," என்றார். இதற்கிடையே, தான் ஆடிய கடைசி ஐந்து லீக் ஆட்டங்களில் நான்கில் செல்சி தோற்றுள்ளதால் அக்குழு அடுத்த பருவ சாம்பி யன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செல்சிக்கு எதிராக விழுந்த ஒரே கோலை அடித்த மான்செஸ்டர் சிட்டி குழுவின் போர்ச்சுகீசிய மத்தியத் திடல் ஆட்டக்காரர் பெர்னார்டோ சில்வா (நடுவில்). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!