தொடர்ந்து ஆபத்தான நிலையில் ரஷ்ய உளவாளியும் அவரது மகளும்

லண்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலும் அவரின் மகளும் ஆபத்தான நச்சுப்பொருளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தே கிக்கப்படும் வேளையில் அது குறித்த போலிசாரின் புதிய விசாரணைத் தகவல்கள் பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப் படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று வில்ட்‌ஷிர் பகுதியில் 66 வயது செர்கெய்யும் அவரது 33 வயது மகளும் மயக்க நிலையில் காணப்பட்டதாக போலிசார் கூறினர். அவர்கள் இருவரும் மயக்க நிலைக்குச் செல்ல எது காரணமாக இருந்திருக்கலாம் என்பது குறித்து போலிசார் புலன் விசாரண செய்து வருகின்றனர். அந்த விசாரணையில் ஈடுபட்டிருந்த இரண்டு போலிஸ் அதிகாரிகளுக்கும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

தந்தையும் மகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படு கிறது. முன்னாள் ரஷ்ய உளவு அதிகாரியான செர்கெய் ஸ்கிரிபால் ரஷ்யாவின் உளவுத் தகவல்களை பிரிட்டிஷ் உளவு அதிகாரிகளுக்கு தெரிவித்த தற்காக ரஷ்யாவில் கைது செய்யப் பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கைதிகள் விடுவிப்பு பரிமாற்ற நடவடிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரி பாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் கொடுத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!