துணை காப்புறுதி: நோயாளி 5% செலுத்தவேண்டும்

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தில் புதிய துணைக் காப் புறுதித் திட்டங்களை சுகாதாரக் காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து பெறும் நோயாளிகள் இனி தங்களுடைய மருத்துவக் கட்டணத்தில் ஐந்து விழுக்காட் டுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். நோயாளிகள் இனிமேல் முழு மருத்துவக் கட்டணத்தையும் செலுத்தக்கூடிய துணைக் காப் புறுதித் திட்டங்களை வாங்க முடியாது. இத்தகைய துணைக் காப்புறுதித் திட்டத்தை வாங்கு வோர் செலுத்தக்கூடிய மொத்த தொகை ஆண்டுக்கு $3,000 அல்லது அதற்கும் அதிகம் என வரம்பு இருக்கும். நோயாளிகள் மருத்துவக் கட்டணத்தில் ஒரு பகுதியை யாவது கட்டவேண்டும் என்று காப்புறுதி நிறுவனங்கள் சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டன. இதனையடுத்து புதிய நட வடிக்கைகள் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்டன. புதிய துணைக் காப்புறுதித் திட்டங்களைப் பொறுத்தவரை நோயாளிகளும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தவேண்டும் என்பதைச் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டு இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!