சிலை உடைப்பு: மோடி, பாஜக கடும் கோபம், எச்சரிக்கை

இந்தியாவின் வடகிழக்கு மாநில மான திரிபுராவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக கூட்டணி வென்றதை அடுத்து அந்த மாநிலத்தில் கம்யூனிச தலைவர் லெனினின் சிலை உடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜக தொண் டர்கள் தங்கள் கோட்பாட்டுக்கு எதிரான தலைவர்களின் சிலை களை உடைக்கும் அணுகுமுறை யைக் கைக்கொள்ள தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன. இதற்குப் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிவிட்ட சூழ்நிலை யில், பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் இத்தகைய சிலை உடைப்பு காரியங்களைக் கண்டித் தனர். பாஜக தலைவர் அமித் ஷா, சிலைகளை உடைக்கும் கட்சி யினரை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று மிகவும் காரசாரமாக சாடினார். தமிழக பாஜக மேலிட பொறுப் பாளர் முரளிதர ராவ், "பெரியார் போன்ற தலைவர்களையோ அவர் களது சிலைகளையோ அவமதிக் கும் கருத்துகளையும் செயல்களை யும் பாஜக ஒருபோதும் ஆதரிக் காது," என்றார்.

திரிபுராவில் லெனின் சிலை, தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப் பட்டதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னையில் நடந்த போராட்டத்தின்போது மாணவர் புரட்சி இளையர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்த போலிஸ் பெரும்பாடுபட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!