சிங்கப்பூர் பிள்ளைகள் வலுவான இருமொழி கற்றல் ஆற்றலுடன் திகழ உதவுவதற்காக அரசாங்கம் மேலும் பல பாலர் பள்ளிகளில் தமிழ், மலாய்மொழி வகுப்புகளை நடப்புக்குக் கொண்டுவரும். அத்தகைய வகுப்புகள் வரும் 2022வாக்கில் முதன்மை நடத்து நரின் 350 பாலர் பள்ளிகளில் இடம்பெற்றிருக்கும். இப்போது தமிழ், மலாய் வகுப்பு களை நடத்துகின்ற இத்தகைய பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 200ஆக இருக்கிறது.
முதன்மை நடத்துநரின் பாலர் பள்ளிகள் என்பவை அரசாங்கத் திடமிருந்து மானியம் பெறக்கூடி யவை. அதற்குப் பதிலாகச் சில குறிப்பிட்ட தரங்களை அவை நிறைவேற்ற வேண்டும். அதோடு மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அள வுக்கு அப்பாலும் கட்டணத்தை அப்பள்ளிகள் உயர்த்தக்கூடாது. கல்வி அமைச்சு நடத்தும் பாலர் பள்ளிகள் அனைத்திலும் இப்போது சீன மொழி உள்ளிட்ட மூன்று தாய்மொழிகளும் போதிக் கப்படுகின்றன. வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் இத்தகைய மேலும் 50 பள்ளிக்கூடங்கள் கட் டப்படும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு மற்றும் கல்வி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். பாலர் பள்ளி கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் 2020ஆம் ஆண்டுவாக்கில் மேலும் 1,000க் கும் மேற்பட்ட தாய்மொழி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உள்ளூர் மக்கள், பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியர்களாக ஆவ தற்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதை அவர் சுட்டினார்.