‘வெற்றிமாறன்’

அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதுப்படம் 'வெற்றி மாறன்'. இதில் அவருடன் புதுமுகம் வினோலியா இணைந்து நடிக்கிறார். லுலு கிரியேஷன்ஸ் சார்பில், சுல்பிகர் தயாரிப்பில் உருவாகிறது இப்படம். மனோ இயக்குகிறார். "இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங் களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதா ரணமாக எடுத்துக்கொள்ள முடி யாமல் போகிறது. அதைத் தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான். "இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற் றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகிறார்கள்.

"இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், உயிர் தப்பி தனது நிலைக்கு காரணமானவர்களைப் பழிவாங்க கிளம்பினால் என்னா கும் என்பதை இப்படம் விவரிக் கும்," என்கிறார் இயக்குநர் மனோ. திகிலும் விறுவிறுப்பும் நிறைந்த இந்தக் கதை, அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்பவர், படத்தில் கதாநாயகன் எதிரிகளைப் பழிவாங்கும் முறை யில் வித்தியாசமான யுக்திகளைக் கையாண்டிருப்பதாகச் சொல்கி றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!