லட்சுமி: திருமணம் ஓர் அழகான உறவு

ஒருவருக்கு ஒருமுறை தான் காதல் மலரும் என்பது தவறான கருத்து. ஒரு காதல் கைகூடவில்லை எனில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் நடிகை லட்சுமி மேனன். சமூக வலைத்தளப் பக்கங்களில் இவர் வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு பலத்த வரவேற்பும் விமர்சனமும் உள்ளன. அண்மைய பேட்டி ஒன்றில், காதல், திருமணம், எதிர்காலம் குறித்தெல்லாம் விலாவரியாகப் பேசியுள்ளார் அம்மணி. மனதைக் கொடுத்து, மனதைப் பகிர்ந்துகொள்ளும் அழகான விஷயம் தான் காதல் என்பது இவர் அளிக்கும் விளக்கம். திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இதுவரை வரவில்லை என்று சொல்பவர், திருமணம் என்பது தன்னை அடிமையாக்கிவிடும் என்று மனதில் தோன்றினால் அப்படியொரு உறவே தமக்குத் தேவையில்லை என்று தெளிவாகப் பேசுகிறார். "வெளிப்படையாகச் சொல்வதானால் எனக்குத் திருமணம் என்பது அவசியமே இல்லை என்பேன். மற்ற பெண்களின் விஷயத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. திருமணம் என்பது அழகான உறவு தான். அதில் மாற்று கருத்து இல்லை.

"ஆனால் அந்த உறவில் நட்பு இருக்க வேண்டும். கணவனுக்குக் கீழே அடிமையாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதற்காக நான் பெண்ணியப் போராளி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். "இப்போது உடல்நலம் நன்றாக உள்ளது. கையில் பணமும் இருக்கிறது. இந்த தைரியத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே திருமணம் என்ற பெயரில் அடிமைத் தனத்தை என்னால் ஏற்கவே முடியாது. "சில அம்மா, மகள்கள் இடையே நல்ல தோழமை இருக்கும். அதேசமயம், தோழிகளாகப் பழகினாலும், அதிலும் ஓர் இடைவெளி இருக்கும். ஆனால் உண்மையான நட்பில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது. எல்லா விஷயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

"எனவே எனக்குக் கணவராக வரப்போகிறவர் நல்ல நண்பராக அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்," என்கிறார் லட்சுமி மேனன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!