சென்னை: வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திரிபுரா மாநி லத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த மகிழ்ச்சியில் பாஜகவினர் அங் குள்ள இரு லெனின் சிலைகளை உடைத்துள்ளனர். இதே போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப் படும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், வட்டாட்சியர் அலு வலகம் அருகே உள்ள பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பாஜக நகரச் செயலர் முத்து ராமன் தலைமையில் அங்கு வந்த பாஜகவினர் கற்களை வீசி சிலையைச் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதைத் தடுத்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கூடியிருந்த பொதுமக்கள் பாஜகவினருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் முத்து ராமனை வளைத்துப் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.