முதல்வர் வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி

சென்னை: கரும்பு விவசாயி களுக்குத் தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையானது ரூ.1,586 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகவலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தரக்கோரி சென்னையில் உள்ள முதல்வர் பழனி சாமியின் வீட்டை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் திரண்ட விவசா யிகள், பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் சண்முகம் தலைமையில் முதல்வரின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது அனைவரை யும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட் டம் நடத்த அனு மதி யில்லை என்று கூறி அவர் களைக் கைது செய்தனர். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய ரவீந்திரன், தனி யார் சர்க்கரை ஆலை கள் தர வேண்டிய 4 ஆண்டு கால நிலுவை தொகையான (மாநில அரசின் பரிந்துரை விலை) ரூ.1,350 கோடி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய கரும்புப் பணப் பாக்கி ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1,586 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!