மேலும் நான்கு ‘ஆக்டிவ் ஹெல்த் லேப்’ அமைக்கப்படவுள்ளன

பீஷான், ஜூரோங் ஈஸ்ட், செங்காங், உட்லண்ட்ஸ் ஆகிய நான்கு விளையாட்டு மையங்களில் இந்த ஆண்டு இறுதியில் 'ஆக்டிவ் ஹெல்த் லேப்' எனப்படும் துடிப் பான ஆரோக்கிய மையங்கள் திறக்கப்படவுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று கூறினார். அத்துடன் இரண்டு நடமாடும் துடிப்பான ஆரோக்கிய மையங் களும் அறிமுகப்படுத்தப்படவுள் ளன. இவை சமூக மன்றங்கள், குடியிருப்பாளர் குழுக்கள், வீட மைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப் புப் பேட்டைகளில் உள்ள விளை யாட்டு இடங்களுக்கு இவை செல்லும். 'ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூரின்' இயக்கமான இதில் சிங்கப்பூரர்கள் தங்கள் உடல் எடையை நிர்வகித்து, ஆரோக்கியமாகத் திகழ நிபுணர் களின் ஆலோசனையைப் பெற லாம். முதல் மையம் 'அவர் தெம் பனிஸ் ஹப்பில்' சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப் பட்டது முதல் இதுவரையில் கிட்டத்தட்ட 2,200 பேர் பயன டைந்துள்ளனர். இரண்டாவது மையம் சென்ற மாதம் பிடோக்கில் திறக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!