ஸ்பெயினில் பெண்கள் போராட்டம்; 300 ரயில்கள் ஓடவில்லை

மட்ரிட்: அனைத்துலக மகளிர் தினமான நேற்று ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்ததால் சுமார் 300 ரயில்கள் சேவை வழங்காது என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்பெயினில் உள்ள 10 பெண்கள் அமைப்புகள் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மட்ரிட் சுரங்க ரயில் சேவைகளும் பாதிக் கப்படும் என்று கூறப்பட்டது. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!