ஃபுளோரிடாவில் கடும் துப்பாக்கிச் சட்டம்

வா‌ஷிங்டன்: ஃபுளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கடுமையான துப்பாக்கிச் சட்டத்தைக் கொண்டுவர வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18லிருந்து 21 ஆக உயர்த்த அந்த மசோதா வகை செய்கிறது. அந்த மசோதா ஏற்கெனவே செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது மாநில பிரதிநிதிகள் சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதில் மாநில ஆளுநர் கையெழுத்திட்ட பின்னர் அந்த மசோதா சட்டமாக்கப் படவுள்ளது. அதுவரை எல்லா துப்பாக்கி விற்பனைக்கும் மூன்று நாட்கள் காத்திருக்கு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஃபுளோரிடாவில் உள்ள டக்லஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!