லண்டன்: பிரிட்டனில் கடந்த ஞாயிறன்று மயங்கிய நிலை யில் காணப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் தற்போது மருத்துவ மனையில் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக அவ்விருவரையும் கொல்ல நச்சு ரசாயனப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப் பதாக பிரிட்டிஷ் போலிசார் நம்புகின்றனர். இந்தக் கொலை முயற்சி பின்னணியில் ரஷ்யா இருக் கலாம் என்று பிரிட்டிஷ் அதி காரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவ்விருவரையும் கொல்ல பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருள், சரீன் அல்லது விஎக்ஸ் நச்சுப் பொருளைக் காட்டிலும் மிகவும் அரிதான ஒன்று என்று தகவல்கள் கூறுகின்றன. அதுகுறித்து பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆம்பெர் ருட் விரைவில் அறிக்கை வெளிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ரஷ்ய உள வாளியையும் அவரது மகளை யும் கொல்ல பயன்படுத்தப்பட்ட நரம்புகளைப் பாதிக்கும் நச்சு ரசாயனப் பொருள் எது என் பதை அரசாங்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளதாக போலிசார் கூறினர். ஆனால் அதுபற்றி பொதுமக்களுக்கு இன்னமும் அறிவிக்கப் படவில்லை.