இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்பதன் தொடர்பில் அந்த மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக் கும் அந்தக் கட்சியுடன் கூட்டு வைத்து தேர்தலைச் சந்தித்த பாஜகவுக்கும் இடையில் விரிசல் கூடிவருவதாகத் தெரிகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்தை அளிக்கப்போவதாக அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த தும் அந்த வாக்குறுதியை நிறை வேற்ற பாஜக தவறிவிட்டது எனக் கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தது.
தெலுங்கு தேசம் இப்படியிருக்க, ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்குப் பதிலாக சிறப்பு நிதித் திட்டங்களை அமலாக்க விரும்புவதாகத் தெரிவித்து வரும் பாஜக, தெலுங்கு தேசத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச மாநில அமைச் சரவையில் இருந்து விலகிக் கொண்டது. பாஜக அமைச்சர்கள் இரண்டு பேர் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்தனர். இதனிடையே, இந்த பரபரப்பான சூழலில் நேற்று ஆந்திர முதல்வர் நாயுடு, பிரதமர் மோடியுடன் பத்து நிமிடங்கள் பேசி, தாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகு வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை விளக்கினார். அந்தப் பேச்சைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரு தெலுங்கு தேச அமைச்சர்கள் நேற்று மாலை பிரதமரைச் சந்திக்க இருந்தனர். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை என்று கேட்டு தெலுங்கு தேசம் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள், புதுடெல்லி யில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.