வாகன சோதனையில் கர்ப்பிணி மரணம்; போலிஸ்காரர் கைது

தமிழ்நாட்டில் திருச்சி அருகே சாலைகளில் வந்த வாகனங்களை போலிஸ்காரர்கள் சோதனையிட்ட போது, இருசக்கர வாகனம் ஒன்றில் தலைக்கவசம் இன்றி சென்ற ராஜா, உஷா என்ற தம்ப தியர் நிற்காமல் போனதாகவும் அதையடுத்து போலிஸ்காரர்கள் தங்கள் வாகனத்தில் அவர்களை விரட்டியதாகவும் கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிளை நெருங் கியவுடன் போலிஸ் வாகனத்தில் இருந்த காமராஜ் என்ற காவல் ஆய்வாளர், அந்த மோட்டார்சைக் கிளை உதைத்துக் கீழே தள்ளி னார். அதில் பின்னிருக்கையில் பயணம் செய்த மூன்று மாத கர்ப்பிணியான உஷா என்ற பெண் கீழே விழுந்து அதே இடத்தில் மாண்டுவிட்டார். இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியதையடுத்து திருச்சி, தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை புதன்கிழமை இரவில் போர்க்கள மாக மாறிவிட்டது. போலிஸ் தடியடி, கல்வீச்சு என்று அந்தப் பகுதியே மோதல் களமாகி 30க்கும் அதிக வாகனங்கள் சேத மடைந்தன. நான்கு மணி நேரம் அந்த நெடுஞ்சாலை நிலைகுத்திப் போனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!